கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெங்களூரு கோவிந்தராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் காவேரிபுரா வார்டில் இருந்து  ரமிலா உமா சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி ரமிலா துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி துணை மேயராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  நள்ளிரவில் நெஞ்சு வலிப்பதாக கூறி  தன்னுடைய குடும்பத்தினரை எழுப்பியுள்ளார் ரமிலா. இதனையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய மருத்துவர்கள், 2 மணிக்கு ரமிலா இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

நேற்று முன் தினம்தான்  துணை முதலமைச்சர்  ஜி.பரமேஸ்வராவுடன் கே.ஆர்.மார்க்கெட்டை ஆய்வு செய்த ரமிலா, முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.