பள்ளிக்கரனை பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ , கனடா செல்வதற்காக எழுதியிருந்த தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த சம்பவம் கேட்பவர்களை மேலும் துயரமடைய செய்துள்ளது.

குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகரைச் சேர்ந்த ரவி என்பவர் மகள் சுபஸ்ரீ (வயது 22). பி.டெக் படித்துள்ள இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி  வந்தார். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி, கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு விட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். துரைப்பாக்கத்திலிருந்து பல்லாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அவர் ரேடியல் சாலையில் பள்ளிக்கரனை வந்தபோது, திடீரென்று சாலையில் நடுவே கட்டப் பட்டிருந்த விளம்பர பேனர்  ஒன்று சுபஸ்ரீயின் மீது கழன்று விழுந்தது, அதில் நிலை தடுமாறி சுபஸ்ரீ சாலையில் சரிந்தார். அப்போது அவரின் பின்னால் வந்த லாரி சுபஸ்ரீயின் மீது ஏரியதில் சம்ப இடத்திலேயே உடல் நசிங்கி உயிரிழந்தார் சுபஸ்ரீ.  இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுபஸ்ரீயின் கனடா செல்லும் கனவு கலைந்தது, அவரின் மரணச்செய்தி அறிந்த பெற்றோர்கள் கதறிக் கதறிக் அழுதனர்.

பேனர் விழாமல் இருந்திருந்தால் என மகள் கனடா சென்று பிழைந்திருப்பாளே என்று அழுது புலம்பினர்.  இந்நிலையில், அவர் கனடா செல்வதற்காக எழுதியிருந்த தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். என்ற செய்தி வெளியானது. அதற்கான கடிதம் சுபஸ்ரீயின் வீட்டிற்கு நேற்று வந்த நிலையில் அந்த கடிதத்தில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் எனவும் , கனடா செல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை கண்ட அவரது பெற்றேர்கள் மகள் சுபஸ்ரீ இதற்காகத்தானே இத்தனை நாள் காத்திருந்தாள் இதை பார்க்க அவள் உயிரோடு இல்லையே என்று புரண்டு கதறி அழுதனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினரும் கண்கலங்கினர். இந்த செய்தி இளகிய மனம்படைத்த அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. எனெனில் சுபஸ்ரீ  உயிருடன் இப்போது இல்லை, இருந்திருந்தால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கனடா செல்ல தயாராகி இருப்பாளே என்ற ஆதங்கம்தான்.