போஸ்டரில் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் புகைப்படங்கள் இருக்கக்கூடாது என நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் புதிய தொடங்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்துள்ளார்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சுதாகர் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் ஆகியோரது புகைப்படமோ அல்லது தனது புகைப்படமோ இடம்பெறக் கூடாது என்று தெரிவித்துள்ளார். 

ரஜினியின் புகைப்படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அதோடு அந்த ஊர் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.