Asianet News TamilAsianet News Tamil

பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு அதிரடி தடை !! கலக்கும் செங்கோட்டையன் !!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்  இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து அமைச்சர் செங்கோட்யைன் உத்தரவிட்டுள்ளார்.

 

ban for palstic in tn schools
Author
Chennai, First Published Sep 15, 2018, 8:34 AM IST

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு  ஜனவரி 1-ஆம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அரசின் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1 முதல், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

ban for palstic in tn schools

இந்த நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்துப் பள்ளிகளிலும், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.  

ban for palstic in tn schools

அதற்கு மாற்றாக உள்ள பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி வளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios