நீதிமன்ற தண்டனையால் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்த பாலகிருஷ்ணா ரெட்டி, ஓசூர் தொகுதியில் தனது மனைவிக்காக சீட்டு கேட்டு விருப்ப மனு அளித்திருக்கிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எதிராக எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்துவந்தது. அந்த வழக்கில் பாலகிருஷ்ணா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அவரது எம்.எல்.ஏ. பதவி தானாகப் பறிபோனது. இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார். 
இதையடுத்து ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஓசூர் தொகுதியிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி, அதிமுக தலைமையகத்தில் மனு கொடுத்தார். அப்போது பாலகிருஷ்ணாவும் உடன் இருந்தார்.