கர்நாடக ஹலால் இறைச்சி விற்பனையாளர் மீது பஜ்ரங் தள உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமியர்கள் எதிர்ப்பு :
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தடையை உறுதி செய்து அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அம்மாநில இந்து அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.

அதன்படி தற்போது கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் இறைச்சி கடைகளில் இருந்து ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளை வாங்க வேண்டாம் என கூறி பஞ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டதில் ஈடுபட்டனர்.
பஞ்ரங் தள் அமைப்பு - போராட்டம் :
இந்நிலையில் பத்ராவதியில் உள்ள ஒரு முஸ்லிம் விற்பனையாளரை பஜ்ரங் தள் ஆட்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. புதன் கிழமை மதியம் 12.30 மணியளவில் பஜ்ரங் தள் செயற்பாட்டாளர்கள் சிலர் ஹலால் இறைச்சிக்கு எதிராக ஹொசமானே பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டடனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டை, கைகலப்பாக மாற இதனால் ஆத்திரமடைந்த ஆர்வலர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

புகாரைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கி, ஐந்து வலதுசாரி ஆர்வலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். 'ஹலால்' இறைச்சி விவகாரத்திற்கு எதிராக இப்போது கடுமையான ஆட்சேபனைகள் எழுந்துள்ளதால், இதனை மாநில அரசு அதை ஆராயும் என்று கர்நாடக முதல்வர் பொம்மை கூறியிருப்பது மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
