திமுகவில் இணைய வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் தலைமை பரிசீலிக்கும், ஆனால் மு.க.அழகிரி இதுவரை வருத்தம் தெரிவித்து கடிதம் தரவில்லை என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு குறித்து செய்தியாளர்களிடம் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது: 

திமுகவை ஆட்சி அமர்த்த கட்சி தொண்டர்கள் துடிப்போடு செயல்ப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அன்றாடம் கட்சி தலைவரை சந்தித்து ஆலோசனைகளை பெறாத இயலாத  நிலையில் ஸ்டாலின் மூலமாக திமுக தலைவரின் ஆலோசனைகளை பெற்று செயல்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

திமுகவின் நிதி முழுவதும் அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்படுகிறது.சட்ட படியான சில நடவடிக்கையை மேற்கொள்ள ஸ்டாலின் செயல் தலைவராக நியமித்தது உதவும். இந்த மாற்றமானது புதிய எழுச்சியை உருவாக்கி இருக்கிறது. கலைஞரின் அறிவுறுத்தலை பின்பற்றியே கட்சிக்காக ஸ்டாலின் பாடுபடுவார்.

கட்சியில் இருந்து  நீக்கப்பட்டவர்கள் தங்களுடைய  செயலில் வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கி மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்..அது போன்ற சூழ்நிலையில் போது அதை தலைமை கழகம் பரிசீலித்து முடிவெடுக்கும்.

மு.க. அழகிரி  தன்னை கட்சியில் இணைத்து. கொள்ள கடிதம் வழங்கினால் அதை கழக தலைவர், பொதுச்  செயலாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகள்  வகுக்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை அழகிரியிடம் இருந்து எந்த கடிதமும் கழகத்திற்கு கிடைக்கவில்லை இவ்வாறு டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.