ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பதில் முன்னணியில் இருப்பவர் ராதாராஜன் . இவர் ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டு போராட்டத்தை விமர்சித்து பிரச்சனையில் சிக்கி கொண்டவர். இவரது ஃபேஸ் புக் பக்கத்தை முடக்கி விட்டதாக கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இளைஞர்கள் போராட்டத்துக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் லண்டன் பிபிசி தமிழோசை வானொலிக்கு ராதாராஜன் அளித்த பேட்டியில் தனித் தமிழ்நாடு வேணும் கேட்டா கண்டிப்பா வந்து 25,000 பேர் வருவாங்க , ப்ரீ செக்ஸுன்னு ஒரு டாபிக் வெச்சா அதுக்கு ஒரு 50,000 பேர் கண்டிப்பா வருவாங்க.
இந்த நாட்டுல ரூல் ஆப் லா... அதுதான் எல்லாத்தைவிடவும் முக்கியம். சுப்ரீம்கோர்ட்ல ஒரு ஜட்ஜ்மெண்ட் ஆர்டர் வந்திருக்குன்னா அதுக்கு நம்ம கட்டுப்படுத்தான் ஆகணும்.
800 மாடு, 900 மாடுகளை லைன்ல நிக்க வெச்சு ஓடவிடுறது எப்படி காட்சிப்படுத்தவில்லைன்னு சொல்றாங்க.. ஜல்லிக்கட்டை வைத்து பணம் சம்பாதிக்கலைன்னு அவங்க சொல்றாங்க.. நான் பணம் சம்பாதிக்கிறாங்கன்னு நான் சொல்றேன். .
அவங்க பணம் சம்பாதிக்கவில்லை என்பதற்கும் ப்ரூப் இல்லை.. அவங்க பணம் சம்பாதிக்கிறாங்க என்பதற்கும் என்கிட்ட ப்ரூப் இல்லை. ஆனால் பெட்டிங் நடக்கிறதுங்கிறது மட்டும் இன்னிக்கு வெட்ட வெளிச்சமா வந்திருக்கு.
காளைகள் என்னை வைத்து வெளையாடுன்னு கேட்க வில்லை. மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால் அதற்கு பிறகு நாங்க என்ன செய்யனுமோ அதை செய்வோம்.
என்று பேசியிருந்தார்.
இது பரவலாக விமர்சிக்கப்பட்டது. உணர்வோடு லட்சக்கணக்கில் போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்தி ராதாராஜன் கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் ராதாராஜனின் ஃபேஸ்புக் முடக்கப்பட்டது. அவரது ஃபேஸ் புக் அக்கவுண்டை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முடக்கிதாகவும் அது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராதாராஜன் நேற்று மதியம் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளித்தார்.
அதில் தன்னுடைய ஃபேஸ் புக் முடக்கப்பட்டது குறித்தும் , விலங்குகள் நல அமைப்பின் தலைவர் , துணைத்தலைவரை விமர்சிப்பது குறித்தும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுள்ளார்..
