விஜய் தனது ரசிகர் கும்பலை கட்சியாக மாற்ற முடியாது.! சினிமாவில் இருந்து வந்தால் வெற்றி கிடைக்காது- குருமூர்த்தி

சினிமாவில் இருந்து வரும் யாரும் இனி தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிபெற முடியாது என தெரிவித்த ஆடிட்டர் குருமூர்த்தி நடிகர் விஜய் தனது ரசிகர் கும்பலை கட்சியாக மாற்ற முடியாது என கூறினார்.

Auditor Gurumurthy has said that no one from cinema can succeed in Tamil Nadu politics

யோகி ஆதித்யநாத் புத்தக வெளியீடு

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்த ' Ajay to yogi adithyanath' எனும்  புத்தகத்தின் அறிமுக விழா சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பங்கேற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  வாழும் மனிதர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்பதில்லை.

யோகி ஆதித்யநாத் அசாதாரணமான மனிதர் , இவர் அரசியல்வாதி மட்டும் அல்ல. உத்தரபிரதேசத்தில் அவர் செய்த சாதனைகள் அவரது சொந்த குண நலனால் செய்ததாக கூறினார்.  ஜீவானந்தம் போன்ற உயர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களை பற்றி போதுமான புத்தகங்கள் வெளிவரவில்லை. அவர் சார்ந்த கட்சி கூட வெளியிடவில்லை.  எல்லா கட்சியிலும் நல்ல மனிதர்கள் இருப்பார்கள்  என தெரிவித்தார். 

Auditor Gurumurthy has said that no one from cinema can succeed in Tamil Nadu politics

இலாக்கா இல்லாத 4 அமைச்சர்கள்

பெரியார் அனைவரும் ஏற்கும் கருத்தை சொல்லவில்லை , தமிழை காட்டுமிராண்டி மொழி என்பதுபோல் பலரும் எதிர்க்கும் கருத்தை கூறியதாக குறிப்பிட்டார். செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், போதுமான மெஜாரிட்டி இருப்பதால் இலாக இல்லாத 4 அமைச்சர்களை கூட முதலமைச்சர் வைத்துக் கொள்ளலாம். சட்டப்படி அதற்கு வாய்ப்பு உண்டு. அது சரியா இல்லையா என்பதை  மக்களும் , திமுக கட்சியும்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.  நடிகர் அரசியல் வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நடிகர் விஜய் பற்றி எனக்கு தெரியாது , சினிமா பற்றியே எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் இனி சினிமாவில் இருந்து வந்து யாரும் வெற்றியடைய முடியாது என நான் நினைக்கிறேன்.  30 ஆண்டுகள் எம்ஜிஆரின் ரசிகர் மன்றம் திமுகவில் இருந்தது.

Auditor Gurumurthy has said that no one from cinema can succeed in Tamil Nadu politics

நடிகர்கள் வெற்றி பெற முடியாது

எனவே திமுகவிற்குள் உள்ளேயே அதிமுக இருந்தது. அதனால்தான் எம்ஜிஆரால் வெற்றி பெற முடிந்தது.  ஆனால் கும்பலை கட்சியாக மாற்ற முடியாது. ரஜினிக்கும் இதே பிரச்சனைதான் ஏற்பட்டது. ரசிகர் கூட்டத்தை அமைப்பாகவோ , கட்சியாகவோ மாற்ற முடியாது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவதற்கான  முயற்சி பெரியளவில் இனி வெற்றி பெறாது. ஒரு கட்சி உருவாகி , மக்கள் மத்தியில் முன்னேறி வர 20 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

சிதம்பரம் கோயிலை சொந்த நிறுவனமாக நினைக்கும் தீட்சிதர்கள்.! அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை-சேகர்பாபு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios