ரஜினிக்கு ஆலோசகராக தான் இல்லை என்று அப்படி ரஜினிக்கு ஆலோசகராக இருக்கும் பட்சத்தில் நான் பெருமைப்படுவேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி சென்னை, நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு நான் ஆலோசகராக இல்லை. 

ரஜினிக்கு நான் ஆலோசகராக இருந்தால் நான் பெருமை அடைவேன் என்று கூறினார். ரஜினி, கமலிடம் அரசியல் பேசுவேன் தவிர ஆலோசகர் அல்ல என்றார். 

காவிரி தேர்தலுக்குப்பின் காவிரி மேலாண்மை வாரியம் திட்ட வரைவு தாக்கல் தேதி அறிவிப்பதே நல்லது என்று கூறினார். காவிரி வழக்கில் வழங்கப்பட்ட 600 பக்க தீர்ப்பை படிக்காமலேயே அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அவர் குற்ற்ம சாட்டினார். 

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி திறமை, ரஜினிக்கான மக்கள் ஆதரவு இவை இரண்டும் வெற்றிடத்தை நிரப்பும். அதிமுக அரசுக்கு செயல்பாடு ஒன்று இருப்பதுபோல் தெரியவில்லை... இருந்தால் பார்க்கலாம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார்.