அமைச்சர் ஜெயகுமாரை கலங்கடிப்பதற்காக பழைய ஆடியோ மேட்டரை தூசி தட்டி பதிலடி கொடுக்க திமுக நிர்வாகிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இளம் பெண் ஒருவரை கர்ப்பமாக்கியது தொடர்பாக அவரது தாயாரிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு தொலைபேசி உரையாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது. அப்போது இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ஜெயகுமார், “என் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலரால் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல. என் மீது களங்கம் கற்பிக்கவே போலியான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள். சசிகலா குடும்பத்தையும், தினகரனையும் நான் கடுமையாக எதிர்ப்பதால், என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தவறான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள். ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்த ஆடியோ வெளியானதன் பின்னணியில் அமமுகவை சேர்ந்த வெற்றிவேல் இருப்பதாக அப்போது கூறப்பட்டது. 

ஆனால் அத்துடன் அந்த ஆடியோ விவகாரம் முடங்கிப்போனது. அமமுக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கையிலெடுத்த இந்த விவகாரத்தை தேர்தல் நேரத்தில் திமுக கையிலெடுக்கும் என அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. அடிக்கடி திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனை மனதில் வைத்து இந்த ஆடியோ விவகாரத்தை தூசி தட்டி எழுப்ப ஒரு டீம் திமுக சார்பில் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எந்தப்பால் போட்டாலும் சிக்சரடிக்கும் ஜெயகுமாருக்கு இந்த ஆடியோ விவகாரத்தை சமாளிப்பது கஷ்டம்தான். குத்துச்சண்டை வீரரான ஜெயகுமார் எப்படி சமாளிக்கப்போகிறாரோ என அதிமுகவினர் பதற்றத்தோடு காத்திருக்கின்றனர்.