எப்படியும் வெற்றி பெறப்போவதில்லை. பிறகு எதற்கு பணத்தை தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டும் என நினைத்து இவ்வாறு மொத்தமாக அடித்து விட்டனர்.
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பாக ஆதிராஜாராம் களமிறக்கப்பட்டார். அவர் ஆரம்பத்திலேயே என்னிடம் பணம் இல்லை என்று கறாராக கூறிவிட்டார். இருந்தபோதிலும் தலைமை பார்த்துக்கொள்ளும் என்று கூறி அவரை களத்தில் இறக்கி விட்டனர்.
தொகுதியில் உள்ள மக்களுக்கு கணிசமாகப் பணத்தை கொடுத்தால்தான் ஓரளவுக்காவது வாக்குகளைப் பெற முடியும் என்று கருதிய தலைமை 15 சி வரை தொகுதியில் செலவு செய்ய கொடுத்து அனுப்பினார்கள். அதுமட்டுமில்லாமல், வேட்பாளருக்கு தனியாக செலவுக்கு என்று 5 சி கொடுத்துள்ளார்கள். இதில் 15 சியை பிரித்து கட்சியின் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், பாக பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து மக்களிடம் கொடுக்க சொல்லியுள்ளனர்.

ஆனால், அவர்கள் சில இடங்களில் மட்டும் ஓட்டுக்கு 500, 1000 என பெயரளவிற்கு கொடுத்துவிட்டு மொத்த பணத்தையும் ஆட்டய போட்டுவிட்டனர். எப்படியும் வெற்றி பெறப்போவதில்லை. பிறகு எதற்கு பணத்தை தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டும் என நினைத்து இவ்வாறு மொத்தமாக அடித்து விட்டனர். அதிலும் குறிப்பிட்ட ஒரு பகுதி செயலாளர் ஒரு நல்ல தொகையை பார்த்துள்ளார்.
தற்போது இவர்கள் எல்லாம் புதிதாக எந்தக் கார் வாங்கலாம். எங்கு சுற்றுலா செல்லலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த பணத்தை மீட்க அதிமுக தலைமை காக்கிகள் உதவியுடன் முடிவு செய்துள்ளது.
