Asianet News TamilAsianet News Tamil

அத்திவரதரை தரிசிக்க சென்று நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேர் !! தலா ஒரு லட்சம் நிவாரணம் அறிவிப்பு !!

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
 

athivaradar death 4 persons amount announced
Author
Chennai, First Published Jul 18, 2019, 8:22 PM IST

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பிரசித்தி பெற்ற வைபவமான அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த வகையில் இந்த வைபவம் கடந்த 1979-இல் நடந்தது.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து  காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

 

athivaradar death 4 persons amount announced18 ஆவது நாள் வைபவமான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடையில் அருள்பாலித்தார். இன்று ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர்.

லட்சக்கணக்கானோர் திரண்டதால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு  முந்திக் கொண்டு செல்ல முயன்றதால் கூட்ட நெரிசலில் ஏராளமானோர் சிக்கினர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையைச் சேர்ந்த நாராயணி ,  நடராஜன்  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த   கங்காலட்சுமி , சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

athivaradar death 4 persons amount announced

இதனிடையே அத்திவரதர் வைபவத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios