Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் துள்ளிக்குதிக்கும் வேல்... எல்.முருகன் அறிவிப்பால் தவிக்கும் நாத்திக கட்சிகள்..!

தமிழகத்தில் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வேல் யாத்திரை தொடங்க உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

Atheist parties suffering from L. Murugan announcement ..!
Author
Tamil Nadu, First Published Nov 12, 2020, 3:16 PM IST

தமிழகத்தில் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வேல் யாத்திரை தொடங்க உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

Atheist parties suffering from L. Murugan announcement ..!

தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் தொடர்ந்து திருத்தணி, திருவொற்றியூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வேல் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். மேலும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக தொடர்ந்த வழக்கிலும் உயர்நீதிமன்றம் பாஜகவிடன் அடுக்கான கேள்விகளை கேட்டதுடன், பக்தி யாத்திரை என்று அரசியல் யாத்திரை செய்வதாக அளிக்கப்பட்ட டிஜிபி அறிக்கையின் பேரில் கண்டித்தது.Atheist parties suffering from L. Murugan announcement ..!

இந்நிலையில் தாங்கள் பின்வாங்க போவதில்லை என கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் ’’எதிர்வரும் 17ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடங்கும். இந்த வேல் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார். 100 பேர் வரை கலந்து கொள்ள கூடிய அரசியல் கூட்டங்களுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில் எல்.முருகனின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாத்திக கட்சிகள் தவிப்பில் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios