Asianet News TamilAsianet News Tamil

மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அசைண்ட்மெண்ட்... திமுக போடும் பக்கா ஸ்கெட்ச்..!

முக்கிய பதவியை அடைந்தே தீர வேண்டும் என்கிற வேட்கையில் உள்ளனர். அதற்காக பல முயற்சிகளை செய்து வருகின்றனர். 

Assignment for those who came from the alternative party ... DMK put  sketch
Author
Tamil Nadu, First Published Jul 20, 2021, 11:01 AM IST

சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் விட்டதை பிடிக்க் வேண்டும், அதிமுக பெல்ட் என்பதை உடைக்க வேண்டும் என கங்கணம் கட்டி களத்தில் இறங்கி உள்ளது திமுக தலைமை.

அதனை சிரமே மேற்கொண்டு, கொங்கு பகுதியில் உள்ள மாற்று கட்சியினரை வளைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது திமுக. அதனை அடுத்து முன்னாள்  முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், நாமக்கல் முன்னாள் எம்.பி., சுந்தரம் ஆகியோர் திமுகவில் இணைக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதிமன்றத்தை சேர்ந்த முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரனும் திமுகவில் இணைந்துள்ளார்.Assignment for those who came from the alternative party ... DMK put  sketch

இந்த நிலையில், அவர்கள் திமுகவில் தமக்கு என்ன பதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர். முக்கிய பதவியை அடைந்தே தீர வேண்டும் என்கிற வேட்கையில் உள்ளனர். அதற்காக பல முயற்சிகளை செய்து வருகின்றனர். சட்டசபை தேர்தலில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தி.மு.க., தோற்று விட்டது. அந்த மாவட்டத்தில் தி.மு.க.,வை வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கட்சி தலைமை உத்தரவு போட்டது. இதையடுத்து அ.ம.மு.க., துணை பொதுச்செயலராக இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனை, கடந்த மாதம் தி.மு.க.,வில் இணைத்தனர்.Assignment for those who came from the alternative party ... DMK put  sketch

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் உறுப்பினர்களையாவது தி.மு.க.,வில் இணைத்தால், பழனியப்பனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுப்பதாக அக்கட்சி தலைமை கூறி இருக்கிறது. அதனால், சென்னையிலிருந்து 30 ஆயிரம் தி.மு.க., உறுப்பினர் படிவங்களை வாங்கிக் கொண்டு போய், தன் ஆதரவாளர்களிடம் கொடுத்து தீயாய் வேலை செய்து வருகிறாராம் பழனியப்பன். 

Follow Us:
Download App:
  • android
  • ios