சட்டமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது மு.க.ஸ்டாலின் வழக்கில் உங்களிடம் உள்ள வீடியோ ஆதாரத்தை காட்டுங்கள் பின்னர் முடிவெடுக்கிறோம் என்று கூறி வழக்கை பிப்.27 வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.


நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரிய முக.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும், சட்டபேரவையின் போது எடுக்கப்பட்ட விடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும்,

மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையும் வலியுறுத்தி எதிர் கட்சி தலைவர் முக.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தார்.

இதே கோரிக்கையுடன் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் கே.பாலுவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்குகள் தலைமை நீதிபதி பொறுப்பு குலுவாடி ராமேஷ், ஆர்.மகாதேவன், ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது, திமுக வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு ஜனநாயகத்துக்கு விரோதமானது, சட்டசபை விதிகளை மீறி வாக்கெடுப்பை நடத்தி உள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்களை தனியார் விடுதியில் அடைத்து வைத்து பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைத்து வந்தனர். இந்த சமயத்தில் குதிரை பேரம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சட்டமன்றத்தில் அவை காவலர்கள் போல் உடையணிந்து காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளே இருந்தனர் என்றார். அப்போது அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கிறதா ? என நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது திமுக வழக்கறிஞர், அதை தான் எந்த வித எடிட் செய்யாமலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கோரியுள்ளோம் என்றார்.


சட்டபேரவையில் இருந்து வீடியோ பதிவை பெறுவது இரண்டாவதாக பார்த்து கொள்ளலாம். முதலில் தங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் என மனுதாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 அதை பார்த்த பின தான் அடுத்த உத்தரவை பிறப்பிக்கமுடியும் என கூறி வழக்கை பிப்.27, திங்கட்கிழமை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.