அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இன்று மாலை சந்திக்கின்றனர். 

சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுக பாஜகவிற்கு முட்டல் மோதல் இருந்து வந்த நிலையில், அண்மையில் தமிழகம் வந்த அமித் ஷா எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை உறுதிப்படுத்தினார். 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சந்திக்கிறார். 2021 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.