ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நிற்க கூடாது தனக்கு பல்வேறு மிரட்டல்கள் வருவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா  தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கபாட்டார். அன்றைய தினத்தில் இருந்து சசிகலாவுக்கு எதிராக பல குற்றசாட்டுகளை முன்வைத்து வந்தார் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா.

இதையடுத்து சசிகலா ஜெயலலிதாவை பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை என்ற புகாரும் எழுந்தது. பின்னர், டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார்.

சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும் தேர்வு செய்யபட்டார். ஆனால் சசிகலா முதலமைச்சர் பதவிக்கு வர முயன்றதால் ஓ.பி.எஸ் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் 45 நிமிடத்த்திற்கு மேலாக தியானத்தில் ஈடுபட்டார். பின்னர், கண்விழித்த ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது பல குற்றசாட்டுகளை முன்வைத்தார். முக்கியமாக ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கு சந்தேகம் இருப்பதால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் பல அதிரடி குண்டுகளை தூக்கி எறிந்தார்.

மேலும் என்னை மிரட்டித்தான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தனர் என்று பகீர் தகவலை வெளியிட்டார்.

அதேபோன்று தற்போது தனியாக பேரவையை தொடங்கிய தீபாவும் ஓ.பி.எஸ் போன்று மிரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா 30 நிமிடத்திற்கு மேலாக ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பெட்டியளித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட கூடாது என்று மிரட்டல் வருவதாகவும், எத்தனை மிரட்டல் வந்தாலும் கண்டிப்பாக நான் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக நிற்பேன் எனவும் தெரிவித்தார்.  

மேலும் நாளை எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பட்டியல் வெளியிடப்படும் எனவும், நாளைமுதல் ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.

இச்சம்பவம் தீபா ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.