திமுக ஆட்சியைப் பிடித்துவிட்ட நிலையில், இந்தத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து, பஞ்சாப்பிலும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையைக் காப்பியடித்து அக்கட்சியின் தேசிய அமைப்பாளார் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் முடிகிறது. இதனையத்து அங்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆனால், முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் காங்கிரஸை விட்டு வெளியேறி, தனிக் கட்சி தொடங்கியிருப்பதால், காங்கிரஸ் கட்சி பெரும் சவாலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல அகாலிதளம், பாஜக ஆகிய கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றும் வியூகங்களை வகுத்து வருகின்றன. 
ஆனால், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு திடீரென செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மி தனி பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கூறப்படுகின்றன. இந்நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டிவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப்புக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போதே தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இரண்டு நாட்கள் பயணமாக பஞ்சாப் சென்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் உறுதிமொழி ஒன்றை அறிவித்திருக்கிறார்.
அமிர்தசரஸில் கெஜ்ரிவால் பேசுகையில், “பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும். ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்குகளிலும் மாதந்தோறும் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும். 18 வயதைத் தாண்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தத் தொகை செலுத்தப்படும்” என்று அதிரடித்துள்ளார் கெஜ்ரிவால். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திமுக ஆட்சியைப் பிடித்துவிட்ட நிலையில், இந்தத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து, பஞ்சாப்பிலும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
