தில்லியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. இந்நிலையில் அந்த 10 வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளில் பாமகவால் அளிக்கப்பட்டது என ராமதாஸ் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையில் 75 ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை கனக்கெடுத்து, உழவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான ஆம்ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையில்  அறிவிக்கப்பட்ட 10 வாக்குறுதிகளில் இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பெரும்பான்மையான  வாக்குறுதிகள் பாமகவால் ஏற்கனவே வழங்கப்பட்டவை என்பதில் மகிழ்ச்சி’’எனத் தெரிவித்துள்ளார்.