Asianet News TamilAsianet News Tamil

தீ பரவட்டும்..! அரசின் அதிகாரத்தையும் ஆளுநர் சிறுமைப்படுத்தக்கூடாது.! கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்

நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் சிறுமைப்படுத்தக் கூடாது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 
 

Arvind Kejriwal appreciated the Tamil Nadu government decision against the governor
Author
First Published Apr 16, 2023, 1:29 PM IST

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்

ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக அல்லாத மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் தமிழகத்தை போல் தங்கள் மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு டெல்லி மாநில முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலிலனுக்கு  அவர் எழுதியுள்ள கடிதத்தில் நமது நாட்டின் நலன் கருதி மிக முக்கிய விவகாரம் குறித்து தனக்கு எழுதிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் இந்தியாவில் ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பது. அனைவரும் அறிந்ததே என்றும், நமது புகழ்பெற்ற அரசியலமைப்பின் ஒவ்வொரு கோட்பாடும் முக்கியமாக சுதந்திரம்,

சிபிஐ விசாரணைக்கு முன் வீடியோ வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.. 144 தடை - அடுத்தடுத்து பரபரப்பு

Arvind Kejriwal appreciated the Tamil Nadu government decision against the governor

ஒப்புதல் அளிக்க காலக்கெடு

சமத்துவம் மதச்சார்பின்மை சகோதரத்துவம் என அனைத்தும் சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியலமைப்புச் சட்டப் பதவி வகிப்பவரும் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று எண்ணம் கூடாது என்றும், இந்தியா சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படுகிறது என்பதையும் அது ஒன்றிய அரசு மற்றம் அதன் பிரதிநிதிகளின் ஆணையால் நிர்வகிக்கப்படவில்லை என்பதையும் நாம் உறுதியாக முன்னிலைப்படுத்த வேண்டிய தகுந்த நேரம் இதுவாகும் என்றும் தனது கடிதத்தில் டெல்லி முதலமைச்சர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்தகைய அதிகாரத்தை மையப்படுத்தும் போக்குகளுக்கு எதிராக உறுதியான தங்கள் நியைப்பாட்டை எடுத்திடும் வகையில் மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி,

Arvind Kejriwal appreciated the Tamil Nadu government decision against the governor

தமிழக அரசை பாராட்டுகிறேன்

ஒன்றிய அரசையும் இந்தியக் குடியரசுத்தலைவரையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தைத் தாம் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.அதே வழியில் ஆளுநர்கள் / துணைநிலை ஆளுநர்கள் தங்களின் அரசியல் சாசனப் பணிகளை மேற்கொள்ள காலக்கெடு  நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இதுபோன்றதொரு தீர்மானத்தை வரும் கூட்டத்தொடரில் டெல்லி சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்வேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

 

அரசை சிறுமைப்படுத்த கூடாது

இந்த கடிதத்திற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தைப் பாராட்டி, எங்கள் முயற்சியில் தாங்களும் இணைந்துகொண்டதற்கு மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டப்பேரவையின் இறையாண்மைதான் உச்சமானது. நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் சிறுமைப்படுத்தக் கூடாது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

கோவை காட்டுப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ..! ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்
 

Follow Us:
Download App:
  • android
  • ios