சிபிஐ விசாரணைக்கு முன் வீடியோ வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.. 144 தடை - அடுத்தடுத்து பரபரப்பு
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அவர், டெல்லியிலுள்ள ஆம் ஆத்மி அரசில் கல்வி உட்பட பல முக்கியத் துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வலதுகரமாக இருந்துவந்த அவர், டெல்லியில் பள்ளிக்கல்வியில் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார். சிபிஐ கைதுசெய்ததால், துணை முதல்வர் பதவியையும், அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
மேலும் தெலங்கானா முதல்வரின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா சிபிஐயால் விசாரிக்கப்பட்டு, தற்போது டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அடிக்கடி விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு முறையும் அவரிடம் பல மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள்.
இதையும் படிங்க..எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி
இந்த வழக்கில் அடுத்த குறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்று ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த நிலையில் கலால் கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக சி.பி.ஐ தலைமையகத்தில் (ஏப்ரல் 16) இன்று ஆஜாராகி விளக்கமளிக்க்க இருக்கிறார். டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வரிந்துகட்டி நிற்பதாக ஆம் ஆத்மி கட்சி அரசு குற்றம்சாட்டி உள்ளது.
இன்று சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், என்னை கைது செய்ய பாஜக சொன்னால் சிபிஐ அதனை செய்யும். சிபிஐ மிக சக்திவாய்ந்த அமைப்பு ஆகும். அவர்கள் நினைத்தால் யாரையும் சிறைக்கு அனுப்ப முடியும்” என்று தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவுள்ள சூழலில் சி.பி.ஐ தலைமையகத்தை சுற்றி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க..அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்