டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை மனைவி சுனிதாவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 63 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதன்மூலம், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸால் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெற முடியாமல் படுதோல்வி அடைந்துள்ளது. 

இதையும் படிங்க;- அமமுகவின் செல்வாக்கான நிர்வாகியை சைலன்டாக தட்டித்தூக்கிய செந்தில்பாலாஜி... தினகரனை மண்டை காய விடும் திமுக..!

இந்த வெற்றி கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் இன்று பிறந்தநாளை கொண்டாடப்பட்டது. எளிமையாக நடைபெற்ற சுனிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். இருவரும் பரஸ்பரம் கேக்கை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் டெல்லி தேர்தல் வெற்றியை மனைவிக்கு பரிசாக வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

கணவர் கெஜ்ரிவாலுக்காக தீவிர பிரச்சாரம் செய்த சுனிதா கெஜ்ரிவாலுக்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் நலம்விரும்பிகள் டுவிட்டர் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது.