தனி கவனத்தை ஈர்த்துள்ள சிறுவன்...தூத்துக்குடி மக்களின் லிட்டில் ஸ்டார் போராளி..!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக,தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு வாழ்    தமிழர்கள் வரை போராட்டம் நடத்தி வருகின்றனர்

மேலும்,தமிழகத்தில் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்தாலும்,ஒரு சிலர் மவுனம் காக்கின்றனர்.

இந்நிலையில்,நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல், தூத்துக்குடி சேர்ந்து, அவருடைய ஆதரவை தெரிவித்தார்.

போராட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ஒரே சேர போராட்டத்தில் குதித்து உள்ளனர்

அதில் குறிப்பாக,மாஸ்டர்.அருண் குமார் தனி கவனம் பெற்று உள்ளார்

இவருடைய போராட்ட எண்ணமும், மக்கள் முன் வீர வசனம் பேசி  தன்னுடைய முழு எதிர்ப்பையும் தெரிவித்து போராட்ட முழக்கம் எழுப்பி  உள்ளார்.

எத்தனையோ பேர் போராடி வந்தாலும்,அங்குள்ள மக்கள் மத்தியில் இவர்  தான் லிட்டில் சூப்பர் ஸ்டாராக உள்ளார்

போராட்டத்தில் தனி கவானம் பெற்றுள்ள மாஸ்டர் அருண் குமாரை  மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.