உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார், நேற்று காலை அனுமதிக்கப்பட்ட அவர்  இரவு தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அதை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர், 

ஜெட்லியின் உடல் நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர், இந்நிலையில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று காலை மருத்துவமனை சென்று ஜெட்லியின் உடல் நலம் குறித்து விசாரித்தார் அது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெட்லியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாகவும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில் ஜெட்லியின் சிகிச்சையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது, ஆனால் அந்த தகவல்  முற்றிலும் தவறானது எனவும், ஜெட்லியின் உடல் நிலையை மருத்துவர் குழு கண்காணித்து வருவதாகவும், பாஜகவினர் தெரிவித்துள்ளனர். தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.