Asianet News TamilAsianet News Tamil

”ஒய்வு தாருங்கள் மோடி” பிரதமர் மோடிக்கு ஜெட்லி எழுதிய உருக்கமான கடிதம்...!

எனது உடல்நிலை மிக கவலைக்கிடமாக ஆனபோது என் மருத்துவர்கள்தான் என்னை மீட்டுக் கொண்டு வந்தார்கள்.  இந்த ஓய்வுக்காலத்தில் அவர்கள் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அதனால் அமையவிருக்கும் அரசில் எந்த வேலைகளிலும் என்னை ஈடுபடுத்த வேண்டாம்”

arun jaitley last letter to modi
Author
Delhi, First Published Aug 24, 2019, 1:36 PM IST

மீண்டும் புதிதாக அமைய விருக்கும் அரசில் எந்த வேலைகளிலும் என்னை ஈடுபடுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது. எனக்கு ஒய்வு தாருங்கள் என அவர் கேட்டிருப்பது படிப்போரின் கண்களில் நீர் வரவழைக்கிறதுarun jaitley last letter to modi

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார் அவருக்கு வயது 64, பழுத்த அரசியல் தலைவரும் நாட்டிற்கு பல நல்லதிட்டங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்த அருண் ஜெட்லியின் மரணச்செய்தி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   நீண்ட நெடிய அரசியல் பயணத்திற்கு சொந்தக்காரரான அருண் ஜெட்லி  உடல் நிலையை காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து விலகியிருந்து விலகியே இருந்தார், இப்போது இந்த  உலகைவிட்டே விடைபெற்றிருக்கிறார்,  என்பதுதான் சோகம்.... உடல்  நளிவுற்றிருந்த நேரத்தில் பிரதமர் மோடி அவர்களிடம் ”எனக்கு ஒய்வு தாருங்கள் மோடி” என அவர் எழுதிய கடிதமே அவரின் கடைசி கடிதம்...அதன் விவரம்:- 

arun jaitley last letter to modi

“இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறது. உங்களுக்கு என் மன பூர்வமான வாழ்த்துகள்... நீங்கள் கேதார்நாத் புறப்பட்ட சமயம் உங்களிடம் சொன்னதுபோல நான் அரசியலிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்துக்கொள்கிறேன். இந்த ஓய்வுக்காலத்தை என் உடல்நலனில் செலவிட திட்டமிட்டிருக்கிறேன்.  கடந்த முறை ஆட்சியில் எனது உடல்நிலை மிக கவலைக்கிடமாக ஆனபோது என் மருத்துவர்கள்தான் என்னை மீட்டுக் கொண்டு வந்தார்கள்.  இந்த ஓய்வுக்காலத்தில் அவர்கள் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அதனால் அமையவிருக்கும் அரசில் எந்த வேலைகளிலும் என்னை ஈடுபடுத்த வேண்டாம்” ”எனக்கு கொஞ்சம் ஒய்வு தாருங்கள் மோடி” என்று அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். arun jaitley last letter to modi

கடந்த முறை கொண்டுவந்த  பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அமலாக்கம் என முக்கியப் பொருளாதார முடிவுகளில் அருண் ஜெட்லியின் பங்கு  குறிப்பிடத்தக்கது.  பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்க இருந்த முந்தைய நாள் இந்த கடிதத்தை மோடிக்கு அருண்ஜெட்லி எழுதிஇருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios