காவிரி கூட்டம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் அறிக்கை வந்த பிறகு தான் தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறினார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ்விடம் கூட்டம் தொடர்பாக கேட்டபோது, முதலமைச்சர் தனக்கு டிக்கெட் செய்ததாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.
ஜெயலிதா வழங்கப்பட்ட சிகிச்சையில் குறித்த விவரங்களை அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாகவே கேட்டு தெரிந்து கொண்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளார். அப்போது ஜெயலலிதாவுக்கு இதய பிரச்சினை ஏற்பட்டு உடல்நலனில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது குறித்தும் தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், அது தொடர்பான சந்தேகங்களுக்கு இன்னும் பதில் கிடைக்காமலேயே உள்ளது. அதை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் ஆறுமுகசாமி கமிஷன். இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டில் உரிய மருத்துவ குழுக்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட வில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டியதுடன், அந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் மருத்துவர்களை உடன் வைத்து விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விசாரணை தொடங்கியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவியாக எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது முதல் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் அதில் ஆஜராகாமல் ஓ பன்னீர்செல்வம் தவிர்த்து வந்தார். தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் முதல் முறையாக அவர் இன்று ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜரானார். அவருடன் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் ஆஜரானார்.
அந்த விசாரணையின் போது வாக்குமூலம் அளித்த இளவரசி சசிகலா மூலமாக 1992 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுடன் தனக்கு அறிமுகம் ஏற்பட்டது என்றும் போயஸ் தோட்டத்தில் தான் தங்கி இருந்தாலும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து தன்னிடம் எதுவும் அவர்கள் கூறியது இல்லை என்றும், ஆனால் வீடு குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை கண்ணாடிவழியாக தான் பார்த்ததாகவும் அவர் மருத்துவமனையில் இருந்த 74 நாட்களும் சசிகலாவே உடனிருந்து கவனித்துக் கொண்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல ஓ.பன்னீர்செல்வத்திடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது, பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றே பதிலளித்தார். அப்போலோ மருத்துவமனையில் செல்வி ஜெயலலிதாவுக்கு என்ன மாதிரியான சிகிச்சை வழங்கப்பட்டது, எதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விஷயங்கள் தெரியாது என்றும் அவர் கூறினார். தான் சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவு நேர்த்தில் தனது உதவியாளர் மூலம் அத் தகவல் கிடைத்ததாகவும், அதன் பின்னரே மறுநாள் பிற்பகல் தான் அப்பல்லோ மருத்துவமனை வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணை ஆணையம் அமைக்க கூறியது யார்? ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார்? என பன்னீர்செல்வத்திடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் ஆணையம் அமைக்கப்பட்டது என பதிலளித்துள்ளார். அதேபோல் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மூலமே தான் தெரிந்து கொண்டதாகவும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நடைபெற்ற காவிரி கூட்டம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் அறிக்கை வந்த பிறகு தான் தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறினார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ்விடம் கூட்டம் தொடர்பாக கேட்டபோது, முதலமைச்சர் தனக்கு டிக்கெட் செய்ததாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

காவிரி கூட்டத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் இதய பிரச்சனை ஏற்பட்டு உடல்நலம் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது குறித்து தனக்கு தெரியாது என்றார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நான் முதல்வரின் உடல்நிலை குறித்து விஜய் பாஸ்கரிடம் கேட்டதற்கு இதய பிரச்சினை என்பதை கூறியதாக ஓ. பன்னீர்செல்வம் ஆணையத்தின் தெரிவித்தார். இதய பிரச்சினை ஏற்பட்ட போது அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும், யார் முடிவு செய்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
