விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மைத்துனரான அருள்மொழித்தேவன்.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளான கயல்விழியை திருமணம் செய்திருக்கிறார் சீமான். இந்த கயல்விழியின் சகோதரர்  அருள்மொழித்தேவன். மதுரையில் வசிக்கும் வழக்கறிஞரான அருள்மொழித்தேவனுக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வழங்கியிருக்கிறது அக்கட்சி. இவரது சகோதரர் டேவிட் அண்ணாதுரை பக்கத்து தொகுதியான மதுரையில் அமமுக சார்பில் களமிறங்குகிறார்.

இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகள் மக்களவை தேர்தலில் களமிறங்கும் பெருமையை சீமானின் உறவினர்கள் பெற்றுள்ளனர். இந்நிலையில் அருள்மொழித்தேவன், “நாம் தமிழர் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன். தமிழ் மீதான பற்றினாலேயே எனக்கு சீட் கிடைத்தது” என்கிறார்.

‘மச்சானுக்கு எம்.பி. சீட் ஒண்ணு பார்சல்’ என்று வலைத்தளங்களில் கலாய்ப்பவர்களுக்கு சீமானின் தம்பிகள் ’முரசொலி மாறன் யாரு? கலைஞரின் அக்கா மகன். கலைஞர் யாரு? முரசொலி மாறனுக்குத் தாய்மாமன். திறமை இருந்ததனால்தானே முரசொலி மாறன் திமுகவில் வளர்ந்தார். மத்திய அமைச்சரும் ஆனார். குடும்ப அரசியல் என்று பேசும் காலமா இது?’ என்று பதிலடி தருகின்றனர்.

 

இந்நிலையில் இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பு வருகின்றன. ’’கட்சியில் தகுதியான தம்பிகள் இல்லாத காரணத்தால் குடும்பத்திற்கு விருதுநகரும் கலைத்துறைக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. நாம்தமிழரே மாற்று, மச்சானை வேட்பாளராய் நிறுத்து!’’ எனவும்,  விருதுநகரில் வேட்புமனுத் தாக்கல் செய்த சீமான் மைத்துனர் - நாம் தமிழர் சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு //தம்பி..எங்க போற.. விருதுநகர் தொகுதியில் எங்க கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மைத்துனர் அருள்மொழித்தேவன் நிற்குறாரு..அவர் ..... போறேன்..’’ என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.