7.5 சதவித இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்று தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்பது குறித்து தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது வேலூர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “திமுக தான் ஏழை மாணவர்களுக்கு உதவ முன்வந்தது. ஆனால் இந்த அரசு அதனைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. அரசு செய்ய வேண்டிய கடமையை எதிர்கட்சியான திமுக செய்துள்ளது. 7.5சதவிதம்  இட ஒதுக்கீட்டுக்கு முழு காரணமும் தி.மு.க தான். நீதிமன்றம் 10 சதவிதக்கு ஒதுக்கசொல்லியது. ஆனால் அரசு 7.5 சதவிகிதம் கேட்டது. நீட் குறித்து தீர்மானம் போட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியதாக அதிமுக சொன்னது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என ஜனாதிபதி மறுத்தார். ஆளுநர் மாளிகையின் முன் திமுக நடத்திய போராட்டத்தை பார்த்து தான் ஆளுநர் இனியும் இதை நிறுத்தத்கூடாது என கையெழுத்திட்டார்.

உதயநிநி கைது செய்து அவரை ஹீரோ ஆக்கிவிட்டார்கள். இது சர்வாதிகார ஆட்சி வீழ்வதற்கான அர்த்தம். ஒரு நல் ஆட்சிக்கு இது நல்லது அல்ல. டாக் ஆப்தி மேனாக உதயநிதி உருவாகிவிட்டார். அமித்ஷா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது. உதயநிதி சாலையில் சென்றதற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் இன்று அமித்ஷாவும் சாலையில் தானே நடந்து சென்றார். மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? எதிர்கட்சி குறையை தான் கூறமுடியும். சென்னையில் அமித்ஷா மீது பதாகை வீசியவர் யாராக இருந்தாலும் ஏற்க முடியாதது. அத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது” எனக் கூறினார்.