சுமார் 39 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ராணுவ வீரர்களுக்கான குடியிருப்பு திட்டத்திற்கு,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று அடிக்கல் நாட்டினார் .  டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவத்திற்கான புதிய தலைமையகம்  கட்டப்பட உள்ளது.  இதை முன்கூட்டியே  இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்திருந்தார் . 

 

அதனடிப்படையில் தால் சேனா பவன் என்ன பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்துக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அனைத்து மத வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டினார் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் இந்து , முஸ்லிம் ,  மற்றும்  கிறிஸ்தவ முறைப்படி வழிபாடு நடைபெற்றது இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ தளபதியின் எம்.எம் .நரவானே ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ  வீரர்களின் வீரம் குறித்த பெருமைகளைக் புகழ்ந்தார்.  

 

அவர்களுக்காக கட்டப்படவுள்ள இந்த கட்டிடம்  பல்வேறு வசதிகளுடன் கூடியதாக அமைந்துள்ளது என்றார்,  சுமார் 7.5 லட்சம் சதுர மீட்டரில் ராணுவ தலைமையகம் அமைய உள்ளது,  இதில் 1, 684 ராணுவ வீரர்கள் மற்றும் 4 330 ஊழியர்களுக்கான  இல்லம் இடம்பெற உள்ளது என்றார். மொத்தம் 6.000  குடியிருப்புகள் இடம்பெறவுள்ளன என்ற அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த கட்டிடம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.  இதனால் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார் .