ராமர் என்பது கற்பனை பாத்திரமா..? அதிமுக-காங்கிரஸ் சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம்
100 கோடி மக்கள் கடவுளாக நாயகராக பார்க்கக்கூடிய ராமரை, நாள்தோறும் ஒருவர் 100 முறை ராமா ராமா என ஒருவர் உச்சரிக்கிறார். ராமர் என்பது கற்பனை பாத்திரம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

சேது சமுத்திர திட்டம்
சேது சமுத்திர திட்டம் செயல்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது அப்போது பேசிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, இந்து முன்னணி உறுப்பினரே, சேது சமுத்திர திட்டத்திற்கு ஆதரவாக அவையில் பேசியுள்ளதாக கூறினார். ராமயணத்தை பற்றியும் சட்டமன்றத்தில் பேசப்பட்டதாக கூறினார். மேலும் ராமர் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டவர் இந்த திட்டத்தை பாஜக அரசு செயல்படுத்தவில்லையென்றாலும், புதிதாக அமையும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தும் என தெரிவித்தார்.
அதிமுக-காங்கிரஸ் வாக்குவாதம்
இதனை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ராமர் என்பது கற்பனை பாத்திரம் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். 100 கோடி மக்கள் கடவுளாக நாயகராக பார்க்கக்கூடிய ராமரை, நாள்தோறும் ஒருவர் 100 முறை ராமா ராமா என ஒருவர் உச்சரிக்கிறார். ராமர் என்பது கற்பனை பாத்திரம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சேது சமுத்திரத் திட்டத்தினால் மீனுவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்து வருவதாகவும் கூறினார். எனவே மீனவர்களையும் மீனவர் பிரதிநிதிகளையும் சேது சமுத்திர திட்டத்தினுடைய பணிகள் குறித்து விரிவான கருத்து கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மீனவர்களின் கருத்து கேட்கப்பட்டது
சேது சமுத்திரம் திட்டம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த திட்டத்தினுடைய சாதக பாதங்களை மீனவ மக்களுடைய கருத்துக்களை கேட்டு அதிகமாக நன்மை இருந்தால் அதனை நிறைவேற்றலாம் என்று தெரிவித்தார். மக்கள் பயன்படக்கூடிய எந்த ஒரு திட்டம் என்றாலும் அதனை அதிமுக ஆதரிக்கும் என குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை பொருத்தவரை எல்லா வகையான ஆய்வுகளும் நடத்திய தான் இந்த திட்டம் செயல்படுத்த பட்டதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இல்லை என்றும் திட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் ஆய்வு கேட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
இதையும் படியுங்கள்