ஆந்திர மாநிலத்தில் படித்த வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக படித்த வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த திட்டம் ஆந்திர மாநிலத்தின் மிக முக்கியமான ஒரு  திட்டமாக இருக்கும் என்றும் . இத்திட்டம் மாபெரும் வெற்றி பெறும் என்றும் நாரா லோகேஷ் தெரிவிதுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஆந்திர அரசாங்கத்தால் ரூ.1200 கோடி ஒதுக்கப்படவுள்ளது.

குடும்ப நபர்களை பொறுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றும்  ஒரே குடும்பத்தில் 2 பட்டதாரி இளைஞர்கள் இருந்தாலும் அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

35 வயதுக்கு மிகாமல் இருக்கும் வேலையில்லாத பட்டதாரிகள் இந்த மாதாந்திர தொகையை பெறலாம் என்றும் நரா லோகேஷ் தெரிவித்தார்.