கொரோனாவால் இறப்பவர்கள் தியாகிகளாம். ஒவைசி கூறுகிறார். இப்போது நோய்க்கு மதம் இல்லை என்பவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

’’முஸ்லிம்னா மனுஷங்க இல்லையா சார். கொரோனா மனுஷனுக்கு வர்ற நோய். அதுக்கு இந்து முஸ்லிம் கிறிஸ்துவன் தெரியாது  என ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, ‘’100% உண்மை. ஆனால், இவர்களது செயல்பாடு கண்டனத்திற்கு உரியதா? இல்லையா? செல்ல சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓடலாமா? மருத்துவர்களை அடிக்கலாமா? தங்களை காப்பாற்றும் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பலாமா? நான் மதம் பார்க்கவில்லை. இவர்களின் அராஜக செயலை கண்டிக்கிறேன். நீங்களும் கண்டிக்க வேண்டும்.

இந்திய அரசு சரியான நடவடிக்கைகள் எடுத்ததால் தான் உலகிலேயே மிகக்குறைந்த பாதிப்பு உள்ள நாடாக இந்தியா உள்ளது. மேலும் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட309 பேரில் 264 பேர் இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிகாரபூர்வ தகவல். இவர்கள் நடவடிக்கை கண்டனத்திற்கு உரியது‌. அகம்பாவத்தை ஆதரிக்காதீர்கள்.

 

பொறுப்பு இல்லாமல் பேசக் கூடாது. அவர்கள் யாரும் தங்களை தனிமைப் படுத்திக்கொள்ள மறுக்கவில்லை. மருத்துவர்களை அடிக்கவில்லை. மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் மீது எச்சில் துப்பவில்லை. மருத்துவமனையில் அராஜகம் செய்யவில்லை. தமிழகத்தில் 309 கொரோனா பாதித்தவர்களில் 264 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்பது அரசின் அதிகாரப்பூர்வ தகவல். 100 கணக்கான நபர்கள் செல்லை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓடலாமா? பரிசோதனைக்கு அழைக்கும் சுகாதார ஊழியரிடம் மோடிக்கு சோதனை செய் என்று பேசலாமா? இவைகள் தீம் செயல்கள்’’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.