Asianet News TamilAsianet News Tamil

திறக்கப்படுகிறதா சினிமா தியேட்டர்கள்..? அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் என்ன?

கொரோனா பரவலால் அவ்வப்போது கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன.  திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் கூட ஓடிடியில் வெளியாகி வருகின்றன. 

Are cinema theaters opening? What is the answer of Minister Ma Subramaniam?
Author
Tamil Nadu, First Published Aug 21, 2021, 11:46 AM IST

கொரோனா பரவலால் அவ்வப்போது கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன.  திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் கூட ஓடிடியில் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.Are cinema theaters opening? What is the answer of Minister Ma Subramaniam?

இந்நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ம.சுப்ரமணியன். ’’கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட தொழில்களில் திரையரங்கு தொழிலும் ஒன்று. கொரோனா முதல் அலையில் மூடப்பட்ட திரையரங்குகள் கொரோனா தொற்று தணிந்த நிலையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டன. மாஸ்டர், சுல்தான், கர்ணன் படங்கள் திரையரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்றன. 

துரதிஷ்டவசமாக இரண்டாவத அலை தீவிரமாக, மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன. பல தொழில்கள் இயங்க அனுமதி அளித்த பின்னும் திரையரங்குகள் திறக்க மட்டும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. முக்கிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி திரையரங்குகளின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.Are cinema theaters opening? What is the answer of Minister Ma Subramaniam?

சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு வழிகாட்டுதல்படி கடைபிடிப்பதாகவும் உறுதி அளித்தனர். தற்போது அவர்களுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மருத்துவக்குழு வல்லநர்களுடன் ஆலோசித்து திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios