டெல்லி சட்டப்பேரவையில் மொத்தம் 70 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு கடந்த 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. விறுவிறுப்பாக நடந்த வாக்கு பதிவில் 62.59 வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பிறகு வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்து வருகிறது. மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் அக்கட்சி 63 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக 7 இடங்களில் வெற்றி வாய்ப்பில் இருக்கிறது. இதற்கு முன்பாக டெல்லியை ஆண்ட காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது.

டெல்லியில் அதள பாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்..! அதிகமுறை ஆட்சியமைத்த கட்சிக்கு நேரும் அவமானம்..!

ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்கிற நிலையில் ஆம் ஆத்மி  அதையும் கடந்து மிகப்பெரிய பெரும்பான்மையை பெற்று வருகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். 3வது முறையாக ஆம் ஆத்மிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்திருக்கும் அவர், 3 வது முறையாக மக்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது எனவும் கூறியுள்ளார்.

சிறந்த கல்வி முன்னேற்றம் வேண்டும் என எதிர்பார்த்த டெல்லி மக்களின் வெற்றி எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் புதிய அரசியல் பிறப்பதற்கு டெல்லி வெற்றி வழி அமைத்து கொடுத்துள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

'இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி'..! டெல்லி வெற்றியில் அதிரடி காட்டும் பிரசாந்த் கிஷோர்..!