அதிமுக வேட்பாளரை பப்ளிக்கா மிரட்டிய அன்புமணி..!!! மச்சானுக்கு ஆதரவா..???
ஆரணி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் சேவல் ஏழுமலையை தேர்தல் பரப்புரையின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் இருக்கும் போதே பொதுமக்களின் மத்தியில் அன்புமணி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் சேவல் ஏழுமலையை தேர்தல் பரப்புரையின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் இருக்கும் போதே பொதுமக்களின் மத்தியில் அன்புமணி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரணி மக்களவைத் தொகுதியில் பாமகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக வேட்பாளர் ஏழுமலையை எதிர்த்து, அன்புமணி ராமதாஸின் மைத்துனர் விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார்.
இந்நிலையில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேவல் ஏழுமலைக்கு அன்புமணி தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது நாங்கள் வேகாத வெயிலிலே நிற்கிறோம் வேட்பாளர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என கோபத்துடன் தெரிவித்தர். மக்களவை தேர்தல் முடியும் வரை நாற்காலியில் உட்காரக்கூடாது என ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம் மேடையில் இருக்கும் போதே வேட்பாளரை மிரட்டல் தொனியில் பேசியுள்ளது அதிமுக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்த்து பேசினார். தோல்வி பயத்தால் ஸ்டாலின் உளறிகொண்டிருக்கிறார். நில அபகரிப்பு என்பது திமுகவின் குலத்தொழில் என்று அன்புமணி குற்றம்சாட்டினார்.
ஆனால் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிறார். அவரை மேடையில் ஒரு வார்த்தைக் கூட விமர்சிக்கவில்லை. குடும்ப உறவைவிட கூட்டணி தர்மத்துக்காக பாமக உழைக்க வேண்டும் என்ற குரல் எழுப்பிய நிலையில் அதிமுக தேர்தல் பரப்புரையின் போது விஷ்ணுபிரசாத் குறித்து பேசாதது மச்சானுக்கு மறைமுகமாக அன்புமணி ஆதரவு அளிக்கிறாரா என அதிமுக தொண்டர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.