Asianet News TamilAsianet News Tamil

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராக அப்ரூவர்..? திமுகவிடம் பேரம்பேசும் சென்னை மாநராட்சி அதிகாரி..!

மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் நந்தகுமார் ஊழல் செய்து விட்டு அதற்கு ஆதரவாக இருந்த முன்னாள் அமைச்சருக்கு எதிராக அப்ரூவராக மாறவும் தயாராக இருக்கிறார்’’ என்கிறார்கள் உள்ளாட்சித்துறை அதிகாரிகள். 

Approver against AIADMK ex-minister ..? Chennai Municipal Corporation official negotiating with DMK ..!
Author
Tamil Nadu, First Published May 10, 2021, 12:53 PM IST

சென்னை பெருநகராட்சியின் மழைநீர் வடிகால், பேருந்து சாலைகள், சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட துறைகளின் தலைமை பொறியாளர் நந்தகுமார், பொதுப்பிரிவில் தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டார். அவர், மழைநீர் வடிகால், பேருந்து சாலை, சிறப்பு திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி பயிற்சி அனைத்து மண்டலங்களின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட துறைகளை கவணித்து வந்தார்.  இந்த அவர் பல நூறு கோடிகள் ஊழல் செய்துள்ளதால் திமுக ஆட்சிக்கு வந்த பின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிகளில் தகிடுதத்தோம் போட்டு வருகிறார் என்கிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.Approver against AIADMK ex-minister ..? Chennai Municipal Corporation official negotiating with DMK ..!

இதுகுறித்து அவர்கள் பேசுகையில், ’’சென்னை மாநகராட்சியில் ரூ 1500 கோடி ஊழல் செய்திருப்பதாக ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸை பணிமாற்றம் செய்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சுகன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஆனால் பணியிடமாற்றம் மற்றும் செய்தால் போதாது. ரூ 1500 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ள பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண் செய்யப்பட வேண்டும் என பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். அதேபோல சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன்,, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ஆசியில் பதவியைப்பிடித்து லஞ்சத்தில் திளைத்து வந்ததாக கூறப்படும்  தலைமை பொறியாளர் நந்தகுமார் மீது ரூ.500 கோடி ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆசியில் அவர் இந்த ஊழல்களை செய்ததாக கூறப்படுகிறது.  Approver against AIADMK ex-minister ..? Chennai Municipal Corporation official negotiating with DMK ..!

நந்தகுமார் கடந்த 06.05.2021 அன்று இரவு ஒப்பந்தகாரர்களிடம் வசூல் செய்த கமிஷன் தொகை ரூ.30 கோடியை கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார் மற்றும் மண்டலம், 5 செயற்பொறியாளர் லாரன்ஸ் இருவர் மூலமாக அமைந்சர் வேலுமணிக்கு அனுப்பி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  திமுக ஆட்சி அமைந்து விட்டதால் சென்னை மாநகராட்சியின்  மழைநீர் வடிகால் பணியில் நடந்த பலகோடி ஊழலால் சஸ்பெண்ட் செய்ய வாய்ப்புள்ளதால் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் தலைவரான பொன் குமார் மூலம் திமுகவுக்கு தூது விட்டுள்ளார் நந்தகுமார். பொன்குமார் நந்த குமாரின் மைத்துனர்.  

பொன்குமார் ஏற்கெனவே திமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுவிட்டார் என்பதால் நந்தகுமாஇன் முயற்சி பலனளிக்கவில்லை.  லஞ்சப்பணம் கொட்டிக்கிடப்பதால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாவுவிடம் ‘’ரூ 20 கோடி செலவு செய்கிறேன். என்னை சஸ்பெண்ட் செய்வதில் இருந்து காப்பாற்றுங்கள்’’என நந்தகுமார் பேரம்பேசி வருகிறார்

.Approver against AIADMK ex-minister ..? Chennai Municipal Corporation official negotiating with DMK ..!

இந்த ரூ.20 கோடி லஞ்சம் கொடுப்பது சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள நந்த குமார் கொடுக்க முன் வந்துள்ளார். மீண்டும் தான் அதே பதவியில் இருப்பதற்காக பல கோடிகளை கொடுக்க தயாராக இருப்பதாகவும் பேரம் பேசி வருகிறார் நந்தகுமார்.  இந்த பேரம் தொடர்பாக மண்டலம் 5 செயற்பொறியாளர் லாரன்ஸ் மூலம் திணமும் மாலை 6 மணியளவில் நந்தகுமாரை அலுவலகத்தில் சில நிமிடங்கள் சந்தித்து பேசி வருகிறார். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நந்தகுமாரின் பேரத்தால் அதிர்ச்சி அடைந்து நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கொதித்துப்போயுள்ளர்.  அதனால் நந்தகுமார் ந்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறி வருகிறார். ஆகையால் ரூ 20 கோடியில் இருந்து தனது பேரத்தை ரூ,30 கோடியாக உயர்த்தி உள்ளார். ழனால் தலைமை பொறியாளர் நந்தகுமார் ரூ.100 கோடி கொடுத்தாலும் அவரை காப்பாற்ற  எந்த அதிகாரிகளும், திமுக அமைச்சர்களும் முன்வரமாட்டார்கள்

மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் நந்தகுமார் ஊழல் செய்து விட்டு அதற்கு ஆதரவாக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அப்ரூவராக மாறவும் தயாராக இருக்கிறார்’’ என்கிறார்கள் உள்ளாட்சித்துறை அதிகாரிகள். 

Follow Us:
Download App:
  • android
  • ios