Asianet News TamilAsianet News Tamil

செம்மலை மேல்முறையீடு.. என் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது.. சசிகலா கேவியட் மனு.!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச் செயலாளராகவும், டிடிவி.தினகரன் துணைப்பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

Appeal in Semmalai Supreme Court.. Sasikala Caveat Petition
Author
First Published Apr 28, 2023, 6:33 AM IST | Last Updated Apr 28, 2023, 6:35 AM IST

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச் செயலாளராகவும், டிடிவி.தினகரன் துணைப்பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதனையடுத்து,  2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க;- எனக்கு போலீஸ் மேல டவுட்டா இருக்கு.. அந்த ரகசியம் கொலையாளிக்கு தெரிந்தது எப்படி? பாயிண்டை பிடித்த சிபிஎம்.!

Appeal in Semmalai Supreme Court.. Sasikala Caveat Petition

இதை எதிர்த்து சசிகலா சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்று சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்ய வேண்டும். அதில் குளறுபடிகள் இருப்பதாக செம்மலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

இதையும் படிங்க;-  அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது... காவல் நிலையம் முன்பு அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு!!

Appeal in Semmalai Supreme Court.. Sasikala Caveat Petition

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செம்மலை மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே, இந்த உத்தரவுக்கு எதிராக யாராவது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என கோரி சசிகலா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios