அதேபோல தமிழக சட்டப் பேரவைக்கான சபாநாயகராக திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் மு. அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு பதவி ஏற்றுக்கொண்டார். அப்பாவுவை அவை முன்னவர் துரைமுருகனும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் சபாநாயகர் நாற்காலியில் அமர வைத்தனர். 16வது தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கி நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதேபோல தமிழக சட்டப் பேரவைக்கான சபாநாயகராக திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் மு. அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இரண்டாவது நாள் கூட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அதிகாரப்பூர்வமாக சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார்.

அப்போது சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவைப் இருக்கையில் அமர வைக்க அவை முன்னவர் துரைமுருகனையும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும் அழைத்தார். அப்போது அப்பாவுவை அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆகியோர் சபாநாயகர் நாற்காலியில் அமர வைத்தனர். அதேபோல துணை சபாநாயகராக கு. பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார்.
