Asianet News TamilAsianet News Tamil

திமுக பேரணியில் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு தலைவர்களே பொறுப்பு !! கடுமை காட்டிய ஹைகோர்ட் !!

தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணியை வீடியோ படம் எடுக்க உத்தரவிட்டுள்ள ஐகோர்ட்டு, அசம்பாவிதங்கள் நடந்தால் தலைவர்களே பொறுப்பு என்று  கடுமையாக கூறி உள்ளது.

any damage  dmk will reponse  high court told
Author
Chennai, First Published Dec 23, 2019, 8:04 AM IST

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணிக்கு தடை விதிக்க கோரி இந்தியன் மக்கள் மன்ற தலைவரும் பத்திரிகையாளருமான வாராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில், போலீசின் முறையான அனுமதி பெறாமல் திமுகவும், அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் சட்ட விரோதமாக பேரணி நடத்த முடிவு செய்து உள்ளனர். ஏற்கனவே மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால்தான் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளது. 

any damage  dmk will reponse  high court told

இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் இதுபோன்ற போராட்டத்தை நடத்தினால் தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும். பேரணி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து திமுக வழக்கறிடம் கேள்வி எழுப்பிய ,  நீதிபதிகள், ஏதாவது பெரிய அசம்பாவிதம் நடந்தால், முழு பொறுப்பையும் நீங்கள் ஏற்க முடியுமா? என்றனர்.
 பேரணி, ஊர்வலம் போன்றவற்றில் கடைநிலை தொண்டர்கள் முதல் நபராக நிற்கிறார்கள். கலவரம், தடியடி என்று எந்த ஒரு சம்பவம் நடத்தாலும், தொண்டர்கள்தான் முதலில் பாதிக்கப்படுகின்றனர். 

any damage  dmk will reponse  high court told

தலைவன் பின்னால் நிற்பதால், எந்த பாதிப்பும் இல்லை. அதனால்தான் இதுபோன்ற சம்பவங்களில் நடைபெறும் கலவரத்துக்கும், பொது சொத்துகள் அழிப்புக்கும் கட்சித் தலைவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. 

எனவே, பேரணி நடத்த வேண்டும் என்றால், அரசியல் கட்சிகள் ரூ.1 கோடி முன்தொகை செலுத்த வேண்டும். பொது சொத்துகள் சேதம் அடைந்தால், சேதம் அடைந்த சொத்தின் மதிப்புக்கு 2 மடங்கு அதிகம் அக்கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இது எங்கள் உத்தரவு இல்லை. இது எங்களது கருத்து. இவ்வாறு வாதம் நடந்தது.

‘ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் ஊர்வலம், பேரணி நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற போராட்டத்தை தடுக்க முடியாது. அதேநேரம், பொதுமக்களுக்கும், பொது சொத்துக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது. 

any damage  dmk will reponse  high court told

எனவே, அசம்பாவிதம் நடந்தால், தகுந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று  பேரணி செல்லும் இடங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்யவேண்டும். 

இதற்காக பறக்கும் கேமராக்களையும் அப்பகுதியில் பயன்படுத்த வேண்டும். ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்ததால் அதற்கு தலைவர்களை பொறுப்பாளிகளாக்க வேண்டும்’ என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios