Asianet News TamilAsianet News Tamil

மாயாவதியை தொடர்ந்து அகிலேசும் காங்கிரசுக்கு குட்பை! அதிர்ச்சியில் ராகுல்!

மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்காக காத்துக் கொண்டிருக்கப்போவதில்லை என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Another setback for Congress: Mayawati, Akhilesh Yadav Rahul Gandhi in Madhya Pradesh
Author
Uttar Pradesh, First Published Oct 7, 2018, 11:06 AM IST

மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்காக காத்துக் கொண்டிருக்கப்போவதில்லை என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார். மத்தியபிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 28ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பலம் வாய்ந்த பா.ஜ.கவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் களம் காண உள்ளது. Another setback for Congress: Mayawati, Akhilesh Yadav Rahul Gandhi in Madhya Pradesh

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் என்று சட்டப்பேரவை தேர்தல் கருதப்படும் நிலையில் மாயாவதி, அகிலேஷ் போன்றோருடன் கூட்டணி அமைத்து மத்தியபிரதேசத்தில் தேர்தலை சந்திக்க ராகுல் திட்டமிட்டார். ஆனால் மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் நிர்வாகிகளோ  தனியாக நின்றாலே ஆட்சியை கைப்பற்ற முடியும் என்கிற நிலைப்பாட்டில் உள்ளனர். மேலும் சமாஜ்வாடி கட்சிக்கோ, பகுஜன் சமாஜ் கட்சிக்கோ தொகுதிகளை பிரித்துக் கொடுப்பது காங்கிரஸ் கட்சியினரைத்தான் அதிருப்தியில் ஆழ்த்தும் என்று அவர்கள் ராகுல் காந்தியிடம் கூறி வருகின்றனர்.

 Another setback for Congress: Mayawati, Akhilesh Yadav Rahul Gandhi in Madhya Pradesh

இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்த நிலையில் மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று மாயாவதி கடந்த வாரம் அறிவித்துவிட்டார். இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருந்த நிலையில் சமாஜ்வாடி கேட்கும் தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் முன்வரவில்லை. இதனால் காங்கிரசுக்காக சமாஜ்வாடி இனி காத்திருக்காது என்று அகிலேஷ் யாதவ் இன்று அறிவித்துள்ளார்.

 Another setback for Congress: Mayawati, Akhilesh Yadav Rahul Gandhi in Madhya Pradesh

மத்திய பிரதேச தேர்தலை பொறுத்தவரை மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டணியில் இல்லை என்றாலும் காங்கிரசுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இதே நிலைப்பாட்டை இருவரும் நாடாளுமனற் தேர்தல் சமயத்தில் எடுத்துவிட்டால் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பாடு திண்டாட்டமாகிவிடும். எனவே தான் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவின் முடிவால் ராகுல் காந்தி அதிர்ச்சியில் உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios