தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறி உள்ளார்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற அஸ்வின்குமார் உபாத்யாயா, ’’இந்தியா முழுவதும் 5 பேர் மிகப்பெரிய ஊழலில் தொடர்பு உள்ளவர்கள். அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ப.சிதம்பரம் கைதாகி தற்போது சிறையில் இருப்பதுபோல, மற்றொரு தமிழக அரசியல்வாதியும்  விரைவில் கைது செய்யப்படுவார்’’ எனக் கூறியுள்ளார். ஐஎன்.எக்ஸ் முறைகேடு வழக்கில்  ப.சிதம்பரம்  திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அஸ்வின் குமார் உபாத்யாயா இப்படிக் கூறி இருப்பதால் அந்த மற்றொரு தமிழகத்தை சேர்ந்தவர் யார் என தமிழக அரசியல் கட்சியினர் திகிலில் உரைந்துள்ளனர். ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல் கனிமொழி, ஆ.ராசா மீதான 2 ஜி வழக்கும் தூசிஒ தட்டப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை அவர்கள் இந்தப்பட்டியலில் இல்லை எனக் கூறப்படுகிறது. காரணம் கடந்த 20 ஆண்டுகளில் அதிமுக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்து தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தன. 

ஆகையால் பாஜக லிஸ்டில் உள்ள அந்த நபர் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரா? அல்லது திமுகவை சேர்ந்தவரா? என்கிற குழப்பத்தில் பீதியடைந்து கிடக்கிறார்கள் அக்கட்சியினர்.