திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வரும் நிலையில், மீண்டும் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வரும் நிலையில், மீண்டும் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வர உள்ள நிலையில், 2வது வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை முறைகளை மீறி சாலை மறியல் செய்ததாக 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெயக்குமார் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
