Asianet News TamilAsianet News Tamil

பேருந்து பயணிகளை மகிழ்ச்சியில் துள்ளவைக்கும் அறிவிப்பு.. போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு.

மேலும் இந்த மாதம் வழங்கப்படும் பயண அட்டையின் கால அவகாசத்தை நீட்டித்து வழங்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று வரும் 26-6- 2021 வரையில் வழங்கிட அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள்.  

Announcement to make bus passengers happy .. Department of Transport Action Order.
Author
Chennai, First Published Jun 24, 2021, 11:10 AM IST

விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயன் அட்டையின் கால அவகாசம் 26- 6- 2021 வரை நீட்டிப்பு செய்துள்ளதாக, மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

 மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர அட்டையானது 29 மையங்களில் (7ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்ற அனைவரிடமும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. நோய்த்தொற்று இல்லாத காலங்களில் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 1.40 லட்சம் பயன அட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

Announcement to make bus passengers happy .. Department of Transport Action Order.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, கடந்த 10-5-2021 முதல்  20-6-2021 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது நோய்த்தொற்று பெருமளவு குறைக்கப்பட்டு பேருந்துகளை இயக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், கடந்த 21-6- 2021 முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்  ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் அவர்கள் கடந்த 21-6-2021 அன்று மாநகர் போக்குவரத்து கழக மத்திய பணிமனையில் ஆய்வு மேற்கொண்டு பின் செய்தியாளர் சந்திப்பில், கடந்த மாதம் 16- 5-2021 முதல் 15- 6- 2021 வரை பயணம் செய்திட வழங்கப்பட்டுள்ள விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண  அட்டையினை வரும் ஜூலை மாதம் 15 -7-2021 வரையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள். 

Announcement to make bus passengers happy .. Department of Transport Action Order.

மேலும் இந்த மாதம் வழங்கப்படும் பயண அட்டையின் கால அவகாசத்தை நீட்டித்து வழங்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று வரும் 26-6- 2021 வரையில் வழங்கிட அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் வரும் 26-6-2021 வரை மாநகர் போக்குவரத்துக் கழக 29 மையங்களில் இந்த பயண அட்டையை பொதுமக்கள் பெற்றுக்கொண்டு வரும் 15-7-2021 வரை பயணம் செய்யலாம், மேலும் மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு குறிப்பிட்ட இடத்திற்கு மாத அடிப்படையில் பயணம் செய்திட மாதாந்திர பயணச்சீட்டு Monthly season ticket (1ஆம் தேதி முதல் 22 தேதி வரையில்)  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பயணச் சீட்டும் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 40 ஆயிரம் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் (16-5-2021 முதல் 15-6-2021 வரையில்) பயணம் செய்திட வழங்கப்பட்டுள்ள மாதாந்திர பயணச் செலவை சீட்டினை வரும் ஜூலை மாதம் (15-7-2021) வரையில் பயன்படுத்தி பயணம் செய்திட அனுமதித்து மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேற்கண்ட தகவலை மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் என அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios