Asianet News TamilAsianet News Tamil

தமிழக சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு. பாளையங்கோட்டையில் நெல்லை முபாரக்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில், எஸ்.டி.பி.ஐ. கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து, ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 


 

Announcement of the list of candidates of the SDPI party in the Tamil Nadu Assembly elections. Nellai Mubarak in Palayankettai.
Author
Chennai, First Published Mar 12, 2021, 2:24 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில், எஸ்.டி.பி.ஐ. கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து, ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

இந்நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம்  இன்று (மார்ச்.12), சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

Announcement of the list of candidates of the SDPI party in the Tamil Nadu Assembly elections. Nellai Mubarak in Palayankettai.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். தொடர்ந்து  எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் விவரங்களை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் வெளியிட்டார்.

 தொகுதி மற்றும் வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:

 1.பாளையங்கோட்ட - V.M.S. முகம்மது முபாரக் @ நெல்லை முபாரக் 
(மாநில தலைவர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு)

2. ஆம்பூர் - அச.உமர் பாரூக்
 (மாநில பொதுச்செயலாளர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு)

3. ஆலந்தூர்    - M.முகம்மது தமீம் அன்சாரி
 (மாவட்ட பொ.செயலாளர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி, தென்சென்னை)

4. மதுரை மத்தி - G.சிக்கந்தர் பாட்ஷா
(மாவட்ட துணைத் தலைவர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி,மதுரை)
(வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி)

5. திருவாரூர்  - M.A.நஸிமா பானு
(மாநில பொதுச்செயலாளர் – விமன் இந்தியா மூவ்மெண்ட்)

6. திருச்சி மேற்கு - R.அப்துல்லா ஹஸ்ஸான்
(மாவட்ட தலைவர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி, திருச்சி) 

Announcement of the list of candidates of the SDPI party in the Tamil Nadu Assembly elections. Nellai Mubarak in Palayankettai.

தொடர்ந்து உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத், தமிழக சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியில் போட்டியிடும்  எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றிபெறச்செய்யுமாறு வாக்காளர்களுக்கும், கூட்டணியின் வெற்றிக்காக தீவிர களப்பணியாற்றுமாறு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios