எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆராக மாறிய அண்ணாமலை... கோவையை அதகளப்படுத்திய பாஜக பேனர்..!
கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
கோவை அன்னூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை வில் அம்போடு ராமர், எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர், தலைமைச்செயலகத்தில் அண்ணாமலை குப்புசாமி முதலமைச்சர் என விதவிதமாக அக்கட்சியினர் பேனர் வைத்தது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இதையும் படிங்க;- மணல் கொள்ளைக்கு எதிராக பாஜக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்... அறிவித்தார் அண்ணாமலை!!
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலைக்கு வரவேற்கும் விதமாக பாஜக நிர்வாகிகள் வைத்த பேனர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
பாஜக நிர்வாகிகள் வைத்துள்ள பேனர்களில் வில் அம்போடு ராமர் போருக்கு செல்வது போலவும், எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் கையில் சாட்டையுடன் இருக்கும் எம்ஜிஆர், தலைமைச்செயலகத்தில் முதல்வராக இருக்கும் அண்ணாமலை போன்ற பேனர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்த பேனர்கள் பாஜகவினர் மற்றும் பொதுமக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க;- பாஜகவில் இணைந்தார் நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ க.அன்பழகன்… அதிருப்தியில் அதிமுக!!