Asianet News TamilAsianet News Tamil

அரசை மிரட்டி பில்டப் கொடுத்த அண்ணாமலை.. 600 பாஜகவினர் மீது கேஸ் போட்டு அலறவிட்ட தமிழக போலீஸ்.

சென்னையில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Annamalai warning tamilnadu government .. Tamil Nadu police who have filed a case against 600 BJP members.
Author
Chennai, First Published Oct 8, 2021, 11:20 AM IST

சென்னையில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அனுமதி என்று ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்களில் வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக டாஸ்மாக், சினிமா தியேட்டர் போன்றவைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களை மட்டும் மூடுவது சரிதானா? எல்லா நாட்களிலும் கோயில்களையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. 

Annamalai warning tamilnadu government .. Tamil Nadu police who have filed a case against 600 BJP members.

இதையும் படியுங்கள்: இதுதான் திமுகவின் சாதனை.. பட்டியல் போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.

இந்நிலையில் அரசின் நடவடிக்கையை கண்டித்து  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 20 கோயில்களுக்கு முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரையில் சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவிலில் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜி பி. செல்வம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சி அமைத்தபோது சொன்னதை தான் சொல்கிறோம், ஒரு எதிர்க்கட்சியாக நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது பாஜகவின் நோக்கம், ஆனால் திமுக தன்னுடைய சித்தாந்தத்தை நம்முடைய பூஜை அறைகளுக்குள் திணிக்க முயற்சிக்கிறது.

Annamalai warning tamilnadu government .. Tamil Nadu police who have filed a case against 600 BJP members.

இதையும் படியுங்கள்: எச். ராஜா, சீமான் ஆகியோர் தமிழக அரசியலுக்கே ஒரு சாபக்கேடு... டார்டாராக கிழித்த ஜெயக்குமார்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக டாஸ்மாக்குக்கு எதிராக போராடியது, ஆனால் ஆளும் கட்சியாக மாறியவுடன் புயல் வேகத்தில் டாஸ்மாக்கை திறந்து இருக்கிறது. மக்கள் வழிபாட்டிற்கு அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறந்து வைக்க வேண்டும், இன்னும் பத்து தினங்களுக்குள் கோயில்களை திறக்கவில்லை என்றால்  போராட்டம் மட்டுமல்ல ஆட்சியே ஸ்தம்பிக்கும் அளவிற்கு நாங்கள் செயல்படுவோம் என அவர் பகிரங்கமாக தமிழக அரசை எச்சரித்திருந்தார். நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அனுமதி என்று ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios