Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை.. என்ன காரணம் தெரியுமா?

நாட்டிற்காக போராடிய தலைவர்கள், தியாகிகள், கலைத்துறையில் சிறந்து வளங்கியர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் தமிழக அரசின் செய்தித்துறை சார்பாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Annamalai thanked CM Stalin.. Do you know the reason?
Author
First Published Nov 3, 2022, 8:03 AM IST

மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக போராடிய தலைவர்கள், தியாகிகள், கலைத்துறையில் சிறந்து வளங்கியர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் தமிழக அரசின் செய்தித்துறை சார்பாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மறைந்த தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பல்வேறு  நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க;- ராஜராஜ சோழனின் பிறந்த நாள்..! இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Annamalai thanked CM Stalin.. Do you know the reason?

இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்ற நிலையில் அண்ணாமலையும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  தமிழ் மொழியை காப்பாற்றும் பாஜக! எல்லாமே பொய்.. அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விட்ட சவால் !

Annamalai thanked CM Stalin.. Do you know the reason?

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு தமிழக பாஜக  சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அறிவிப்பு வந்த இந்த நன்னாளில், தமிழக அரசுக்கு தமிழக பாஜக  சார்பாக ஒரு கோரிக்கையை தமிழக மக்களின் சார்பாக முன்வைக்கிறோம்.

 

 

அகில உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோவில் கண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் உடையாளூரில் உள்ளது. பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் இருக்கும் மாமன்னரின் நினைவிடத்தை தமிழக அரசு புனரமைத்து அவ்விடத்தில் ஒரு மாபெரும் நினைவிடம் அமைத்திட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வர் செயல்படுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  ஒத்த ஓட்டு ஓட்டைவாய் அண்ணாமலை.. உளறிக் கொட்டாதீங்க.. சும்மா எகிறி அடிக்கும் செந்தில் பாலாஜி..!

Follow Us:
Download App:
  • android
  • ios