நீங்களா அமைச்சராக தொடர்வது தமிழக மக்களின் சாபக்கேடு.. மனோ தங்கராஜை விளாசிய அண்ணாமலை..!

உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.

Annamalai slams minister mano thangaraj tvk

வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றதை 48 மணி நேரத்தில் நிரூபிக்க வில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், ஆவின் பாலில் கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக அண்ணாமலை பேசுகிறார் என கூறினார். 

இதையும் படிங்க;- மணலில் 60 ஆயிரம் கோடி சம்பாதிச்சிருக்காரு.! வீடியோ வெளியிட்டு துரைமுருகனை போட்டு தாக்கும் மாஜி திமுக நிர்வாகி

Annamalai slams minister mano thangaraj tvk

இந்நிலையில், தான் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுவெளியில் வெளியிட வேண்டும். இல்லையென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Annamalai slams minister mano thangaraj tvk

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்;- திரு. மனோ தங்கராஜ் அவர்களே இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.

இதையும் படிங்க;-  கலாச்சார சீர்கேட்டின் உச்சத்தில் சென்னை.. நேரம் கடந்து பப் திறந்து வைத்தது யார் குற்றம்? நாராயணன் திருப்பதி!

Annamalai slams minister mano thangaraj tvk

உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios