பாலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். 

பாலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர், திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலையை மூன்று ரூபாய் குறைத்து அறிவித்தது. இதனால் ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் செலவினர் ஏற்படுகிறது.

இதையும் படிங்க: சொத்துவரி, மின் கட்டணம் வரிசையில் தற்போது பால் விலை உயர்வு.. திமுக அரசை தூக்கி எறியுங்கள்.. ஓபிஎஸ் ஆவேசம்..

தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தும் பால் விலை உயர்த்தப்படவில்லை. வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பாஜக அரசு பாலுக்கு கூட ஜிஎஸ்டி போட்டுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!

அவரின் இந்த கருத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது. பாலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர். பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Scroll to load tweet…